மனிதனின் வரலாற்றை கொண்டு தாம் தீர்ப்பு வழங்குவதில்லை தீபக் மிஸ்ரா பேச்சு

உலகிலேயே மிகவும் வலுவான, வலிமையான அமைப்பு இந்திய நீதித்துறைதான் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார்.

Update: 2018-10-01 17:05 GMT
புதுடெல்லி,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த அக்டோபர் 10, 2011 முதல் பதவி வகித்து வந்த தீபக் மிஸ்ரா. நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து டெல்லியில் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. 

விழாவில் பேசிய தீபஸ் மிஸ்ரா,

உலகிலேயே மிகவும் வலுவான, வலிமையான அமைப்பு இந்திய நீதித்துறைதான்.  மனிதனின் வரலாற்றை கொண்டு தாம் தீர்ப்பு வழங்குவதில்லை என்றும், அவர்களது நடவடிக்கைகளை பொறுத்தே தமது தீர்ப்பு அமையும்.

இளம் வழக்கறிஞர்கள் நமது நீதித்துறையை மேம்படுத்துவார்கள். நீதிமன்ற தீர்ப்புகள் மனிதத் தன்மையுடன் இருக்க வேண்டும்.  
கண்ணீர் என்றால் கண்ணீர்தான்; அதில் பணக்காரன், ஏழை என நாங்கள் பார்ப்பதில்லை. நீதித்துறையில் இருக்கும் சுதந்திரம், அதனை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.அது அப்படியே தொடரும்.  

உச்சநீதிமன்றம் என்பது அனைத்திற்கும் உச்சமாக இருக்கிறது. அது தொடர வேண்டும். ஒரு நீதிபதியாக எனது முழு பணிக்காலத்திலும், சமத்துவம் என்னும் நீதி தேவதையிடம் இருந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. பார் கவுன்சிலிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். தற்போது மிகவும் திருப்திகரமாக ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்தார்.

இதே விழாவில் பேசிய, புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள ரஞ்சன் கோகோய், தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புகள் எதிர்காலத்திலும் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.

மேலும் செய்திகள்