வீட்டுக்காவலில் இருந்து மனித உரிமை ஆர்வலர் நவ்லகா விடுவிப்பு: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

வீட்டுக்காவலில் இருந்து மனித உரிமை ஆர்வலர் நவ்லகாவை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-10-01 16:56 GMT
புதுடெல்லி,

கடந்த ஆகஸ்டு மாதம் 28–ந் தேதி மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதேபோல மேலும் 4 மனித உரிமை ஆர்வலர்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மராட்டிய மாநிலம் கோரேகான்–பிமா கிராமத்தில் வன்முறையை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மராட்டிய மெட்ரோபாலிடன் தலைமை மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் நவ்லகா வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து நவ்லகா டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ததுடன், நவ்லகாவை 24 மணி நேரத்துக்கு மேலாக சிறைபிடித்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறி விடுவிக்க உத்தரவிட்டது. மாநில அரசின் விசாரணையை இந்த உத்தரவு தடுக்காது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் 5 வாரங்களுக்கு பிறகு நவ்லகா வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

மேலும் செய்திகள்