ஜம்மு: பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி

ஜம்முவில் உள்ள பயங்கரவாத இயக்கத்தில் எம்.பி.ஏ பட்டதாரி சேர்ந்து இருப்பது பெற்றோரையும் உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Update: 2018-09-04 08:12 GMT
ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச்சேர்ந்த பட்டதாரி இளைஞர், பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது, அவரது பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜம்முவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்ற, இளைஞர், ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தில் சேர்ந்ததாக வெளியான தகவல்,  இளைஞரின் பெற்றோர் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

ஏகே. 47 துப்பாக்கியை ஏந்தியபடி பட்டதாரி இளைஞர் நின்ற புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. இதன்மூலமே, பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தததாக சந்தேகப்பட்ட பெற்றோர்கள், மீண்டும் வீடு திரும்பி வருமாறு தனது மகனுக்கு  கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இச்சம்பவம் பற்றி, ஜம்முவில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “ அந்த இளைஞர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து விட்டாரா? இல்லையா? என்பதை நாங்கள் உறுதி செய்ய விசாரித்து வருகிறோம்” என்றனர். 

முன்னதாக, தோடா மாவட்டத்தில் உள்ள சாசன் பகுதியைச்சேர்ந்த  அபிட் ஹூசைன் பட் என்ற இளைஞர், கடந்த ஜூலை 1 ஆம் தேதி பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார். அனந்தநாக்கில், கடந்த ஜூலை 25-ல் நடந்த என்கவுண்டரில், ஹூசைன் சுட்டுக்கொல்லப்பட்டார். 

மேலும் செய்திகள்