காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல் சம்பவம்: 26 வயது இளைஞர் பலி, பள்ளிகள் மூடல்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக் காரர்களுக்குமிடையே நடைபெற்ற கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். #KashmirClashes

Update: 2018-09-04 05:37 GMT
புல்வாமா,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக் காரர்களுக்குமிடையே நடைபெற்ற கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

தெற்கு காஷ்மீர் பகுதியிலுள்ள சேவா கலான் கிராமத்திலிருந்து குசோ செல்லும் பகுதியில் இளைஞர்கள் பலர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டதால் பாதுகாப்பு படையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு, இளைஞர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் நிகழ, இளைஞர்கள் இருவர் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பயாஸ் அகமத் வானி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். 

தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புல்வாமா பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்