ஸ்பெயினில் தத்தெடுக்கப்பட்டு கைவிடப்பட்ட இந்திய சிறுமி இந்தியா அழைத்து வர நடவடிக்கை மேனகா காந்தி தகவல்
ஸ்பெயினில் தத்தெடுக்கப்பட்டு கைவிடப்பட்ட இந்திய சிறுமியை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உடான் (( Udaan)) என்ற தொண்டு நிறுவனம்,ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயது சிறுமியை தத்து கொடுத்தது. ஆனால், அந்த சிறுமிக்கு 7 வயதுதான் ஆவதாகக் கூறி தங்களுக்கு தத்து கொடுக்கப்பட்டதாகவும், தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும் அந்த ஸ்பெயின் தம்பதி குற்றம்சாட்டினர்.
மேலும், அந்த சிறுமியை ஸ்பெயினில் உள்ள ஜரகோஜா ((Zaragoza)) என்ற நகரில் அரசு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர்.
இந்தநிலையில் இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கூறியதாவது:
ஸ்பெயினில் இருந்து சிறுமி நிச்சயமாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்படுவார். அவரைத் தத்துக் கொடுத்த தொண்டு நிறுவனம் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
சிறுமி பாதுகாப்பான முறையில் இந்தியா வருவார். இதுதொடர்பாக ஸ்பெயினுக்கான இந்தியத் தூதர் வெங்கடேஷ் வர்மாவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்''
என்று மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.