பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 5-ந்தேதி தொழிலாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 5-ந்தேதி தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொள்கின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

Update: 2018-09-01 21:45 GMT
புதுடெல்லி, 

தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வருகிற 5-ந்தேதி அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு. மற்றும் அகில இந்திய கிசான் சபா ஆகிய 3 அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும், பத்திரிகையாளர் சந்திப்பும் டெல்லியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்’ என்றார்.

மேலும் செய்திகள்