நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த சென்னை மாணவர்கள்: தேடும் பணி தீவிரம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள சித்தீஸ்வரா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த சென்னை மாணவர்கள் 2 பேரை தேடி வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஆரே கிராமத்தில் சித்தீஸ்வரா நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்னையில் உள்ள ஈஸ்வரி என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலம்பரசன் (வயது 20), விஜய்ஆனந்த் (20) ஆகியோர் நேற்று குளிப்பதற்காக சென்றனர்.
அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக தடுமாறி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தனர். நீர்வீழ்ச்சியில் சென்ற வெள்ளம் இருவரையும் அடித்து சென்றது. இதைக் கண்ட அக்கிராம மக்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.