ஆந்திர பிரதேசத்தில் விலங்குகள் காப்பகத்தில் பசுக்கள் உள்பட 30 கால்நடைகள் பசியால் உயிரிழப்பு

ஆந்திர பிரதேசத்தில் விலங்குகள் காப்பகத்தில் பசுக்கள் உள்பட 30 கால்நடைகள் பசியால் உயிரிழந்து உள்ளது.

Update: 2017-07-21 08:41 GMT

அமராவதி,

 கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ‘மிருகவதை தடை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள்- 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை வெளியிட்டது. 

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு வதைக்கு எதிராக கடுமையாக தண்டிக்கும் சட்டங்களை கொண்டுவரப்பட்டு உள்ளது.

 நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமானது அதிகரித்து காணப்படுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. 

பிரதமர் மோடியும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் அதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது. மாநில அரசுக்கள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் பொதுமக்களை தாக்கும் நிலை நீடிக்கும் நிலையில் ஆந்திராவில் விலங்குகள் காப்பகத்தில் பசுக்கள் உள்பட கால்நடைகள் பசியால் உயிரிழந்து உள்ளன. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு எதிரான கொடுமையை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்டு உள்ள காப்பகத்தில் (விலங்குகள் நல ஆர்வலர்களால் நிர்வாகம் செய்யப்படுகிறது) சாண குவியலுக்கு இடையே அழுகிய நிலையில் பசு உள்பட கால்நடைகளின் சடலங்கள் காணப்பட்டு, மீட்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் கால்நடை வளர்ப்பு, வருவாய் மற்றும் நகராட்சித் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவானது நிலையை பார்வையிட்டு விசாரித்தது.  

குழுவில் இடம்பெற்ற கால்நடை வளர்ப்பு துறை இயக்குநர் வெங்கடேஷ்வர் ராவ் பேசுகையில், “கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்த 14 கால்நடைகளின் சடலத்தை மீட்டோம், புதன்கிழமை 4 சடலத்தை மீட்டு உள்ளோம்,” என கூறிஉள்ளார். 400-க்கும் அதிகமான விலங்குகள் மிகவும் மோசமான நிலையில் உயிர் பிழைக்க போராடி வருகின்றன. 22 விலங்குகள் நேற்று பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர செய்யப்பட்டது. மற்றவையை மீட்கும் பணியும் நடக்கிறது. முன்னதாகவே 12 கால்நடைகள் உயிரிழந்து உள்ளது, ஆனால் சடலங்கள் அகற்றப்பட வேண்டியது உள்ளது என ராவ் கூறிஉள்ளார். 

இதற்கிடையே புதன் கிழமை மட்டும் 11 கால்நடைகள் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

வெங்கடேஷ் ராவ் மேலும் பேசுகையில், “கால்நடைகள் பராமரிப்பு மையத்தில் கால்நடைகளுக்கு உணவு, தண்ணீர் கிடையாது, கால்நடைகள் வெளிப்படையாகவே பசியால் வாடிவந்து உள்ளன.” உயிர் பிழைத்து உள்ள கால்நடைகளும் எழும்பும், தோலுமாக காணப்படுகிறது. விலங்குகளுக்கு ஊசி செலுத்தவோ, நரம்பு மூலம் திர உணவுகளை வழங்கவோ மிடியாத மோசமான நிலையில் உள்ளன. 
 
கால்நடைகளுக்கு பாதுகாப்பான கொட்டகை கூட கிடையாது, 200 கால்நடைகள் கூட அடைக்க முடியாத கொட்டகையில் 450 கால்நடைகள் அடைக்கப்பட்டு வந்து உள்ளது.

கொட்டகையை பராமரிக்கும் பணிகள் நடைபெறவில்லை, சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற வில்லை. கொட்டகையில் முழங்கால் அளவிற்கு சாணம் காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது, நிலையை மிகவும் மோசமாக்கி உள்ளது. இறைச்சி கூடங்களுக்கு கொண்டு செல்லப்படும் பசுக்கள் மற்றும் காளைகள் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஆர்வலர்கள் அவற்றை தன்னிச்சையாக பராமரித்து உள்ளனர், ஆனால் கால்நடைகளுக்கு உணவுகூட வழங்காமல் மோசமான நிலையில் வைத்து உள்ளனர் என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்