பேருந்து விபத்தில் பலியான பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்; மோடி அறிவிப்பு
பேருந்து விபத்தில் பலியான பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்களை சுமந்து சென்ற பேருந்து ஒன்று பள்ளத்திற்குள் விழுந்தது.
இந்த விபத்தில் 16 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 35க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.