துணை ஜனாதிபதி தேர்தல் கோபால கிருஷ்ண காந்தி ஜூலை 18ல் வேட்பு மனு தாக்கல்
எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி ஜூலை 18ல் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி தேர்தல் வருகிற ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 18 எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டணி கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
துணை ஜனாதிபதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 18 ஆகும்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி ஜூலை 18ல் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.