சசிகலாவுக்கு சிறையில் சலுகை குறித்த அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன்- டிஐஜி ரூபா

சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கபட்டது குறித்து அனுப்பிய அறிக்கையில் உறுதியாக இருப்பதாக டிஐஜி ரூபா கூறி உள்ளார்.

Update: 2017-07-14 12:12 GMT
பெங்களூர்

சசிகலா சலுகை வழங்கபட்டது  விவகாரம் குறித்து கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா  விளக்கம் அளித்து உள்ளார் அதன் விவரம் வருமாறு:-

சசிகலா சலுகை வழங்கபட்டது  விவகாரத்தில் டிஜிபிக்கு அளித்த அறிக்கை பற்றி நான் ஊடகங்களிடம் பேசவில்லை. என்னை குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது நியாயமற்றது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தொடர்புடைய அனைவர் மீதும் எடுக்க வேண்டும்.

என் மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். சசிகலாவுக்கு சிறையில் சலுகை குறித்த அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன். சசிகலா அறையில் டிவி, மின்விசிறி இருந்த படக்காட்சிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்