டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் உயர்ந்துள்ளன - நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

நிதி ஆயோக் உறுப்பினரான வி கே சாரஸ்வத் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது என்றார்.

Update: 2017-07-14 12:04 GMT
ஹைதராபாத்

“இன்றைய செய்தித்தாள்களின்படி 65 லட்சம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் “பீம்” செயலி மூலம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. அது மிகவும் திருப்திகரமானது” என்றார். 

காசில்லா பரிவர்த்தனை கருவிகளின் விற்பனை அதிகரித்துள்ளன, அது அனைத்து இடங்களிலும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ”நாம் அத்தகைய கருவிகளை இறக்குமதி செய்கிறோம். இதன் உள்நாட்டு உற்பத்தி இதுவரை அதிகரிக்கவில்லை. நாம் அதை இப்போது அதிகரித்து வருகிறோம். மேலும் இறக்குமதியும் மானிய விலையில் இருக்கும்படி அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார் சாரஸ்வத்.

ஜவுளி மற்றும் ஆடைகள் துறைகளைத் தவிர இதர அமைப்பாக்கம் செய்யப்படாத துறைகளில் காசில்லா பரிவர்த்தனைக்கான கருவிகளின் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ”இன்று சந்தையில் பணப் புழக்கம் இருந்து வருகிறது. இதில் அமைப்பாக்கம் செய்யப்படாத துறைகளில் கூட பணத்தை எண்ணி வியாபாரம் செய்வதை விட ஸ்வைப் மிஷின்களை வைத்து காசில்லா பரிவர்த்தனை நடைபெறுகிறது.  காசில்லா பரிவர்த்தனை பணப் பரிவர்த்தனையை விட சிறந்தது என அத்துறையினர் புரிந்து கொண்டதே காரணம் என்று கூறினார் சாரஸ்வத்.

டிஜிட்டல் மயமாதல் திறமை, ஊழல் ஒழிப்பு மற்றும் வணிக விரிவிற்கு இட்டுச் சென்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் செல்போன்களின் விற்பனை சுமார் ஒரு பில்லியனை நெருங்கியுள்ளது அதுவே வணிக விரிவின் அளவை சுட்டிக்காட்டுகிறது என்றார் சாரஸ்வத்.

பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு உடனடியாக பொருளாதாரத்தில் சுணக்கம் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை சீரடைந்து விட்டது என்றார் அவர். 

மேலும் செய்திகள்