கேரளா: செவிலியர் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

Update: 2017-07-14 10:01 GMT
திருவனந்தபுரம்

செவ்வாய் அன்று அடையாள வேலைநிறுத்தம் செய்த தனியார் மருத்துவமனை செவிலியர் வரும் 17 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற  வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். சுமார் 80,000 செவ்லியர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த யுனைடெட் நர்சஸ் அசோசியேஷன், இந்தியன் நர்சஸ் அசோசியேஷன் “பல ஆண்டுகளாக மிகக்குறைவான ஊதியத்தில் பயிற்சி நர்சுகளாகவே பணியாற்ற வற்புறுத்தப்படுகின்றனர். இதை எதிர்த்தே வேலைநிறுத்தம்” என்றார்.  செவிலியரின் ஒரு பகுதியினர் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த ரூ.20,000 குறைந்தபட்ச சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோருகின்றனர்.

இதைத் தொடர்ந்து பல்வேறு தனியார் மருத்துவமனைகள் தங்களது சேவைகளை குறைத்துக் கொண்டு அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப் போவதாக கூறியுள்ளனர்.

செவிலியரின் கோரிக்கைகள் மீது மருத்துவமனை உரிமையாளர் சங்கங்கள் பரிவோடு இருந்தாலும் அவர்களின் சம்பளம் அதிரடியாக உயர்வது மருத்துவமனைகளின் இயக்கத்தை பாதிக்கும் என்கின்றனர்.

மேலும் செய்திகள்