கோவில், மசூதி தேவாலயங்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி கிடையாது: மத்திய அரசு

கோவில், மசூதி, தேவாலயங்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Update: 2017-07-11 11:00 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜி.எஸ்.டி வரி கடந்த 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. கோவில் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.  

இது குறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது:- “   கோவில், மசூதி தேவாலயங்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சர்க்கரை, எண்ணைய் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.ஸ்டி வரி உண்டு.  வழிபாட்டு தலங்களில் வழங்கப்படும் அன்னதானத்துக்கு ஜி.எஸ்.டி இல்லை” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்