ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கை தடை நீக்கம் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
சென்னை ஐஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஐஐடியில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு விதித்த இடைக்காலத் தடையை சுப்ரீம் கோர்ட் விலக்கிக்கொண்டது.
புதுடெல்லி,
ஜெஇஇ தேர்வின்போது, ஹிந்தி மொழி, கேள்வித்தாளில் பிழை இருந்தபோதிலும், ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், 'கிரேஸ் மார்க்' வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கு மொத்தமாக இடைக்கால தடை விதிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஐஐடி மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சலிங்கிற்கு விதித்த இடைக்கால தடையை விலக்கிக் கொண்டுள்ளது.
மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று சுப்ரீம்கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.