வறுமை காரணமாக மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி
மத்திய பிரதேசத்தில் வறுமை காரணமாக மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை விவசாயி உழுத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சோகார்கா,
மத்திய பிரதேச மாநிலம், சேகோர் மாவட்டம், பசந்த்புர் பங்கிரி கிராமத்தை சேர்ந்தவர் சர்தர் கஹ்லா. விவசாயியான இவருக்கு ராதிகா(14) மற்றும் குந்தி(11) என்ற இரு மகள்கள் உள்ளனர். வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் உள்ளனர்.
விவசாய பணிகளை துவங்க வேண்டிய நிலையில் தனது நிலத்தை உழும் பணிக்கு சர்தாரிடம் சொந்தமாக மாடுகள் இல்லை. வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு அவருக்கு போதுமான நிதி இல்லை. இதனால், அவர் தனது இரண்டு மகள்களை ஏரில் கட்டி நிலத்தை உழுதார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நிலத்தை உழுவதற்கு மாடுகளை கொண்டு வருவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. பணப்பிரச்னை காரணமாக எனது இரண்டு மகள்களும் படிப்பை பாதியில் விட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, ’சிறுவர்கள் இது போன்ற உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாகவும்’ கூறினர்.