3 வயது குழந்தைக்கு கண்களில் கண்ணீருடன் கலந்து வரும் ரத்தம் பெற்றோர்கள் அதிர்ச்சி

ஐதராபாத்தில் 3 வயது குழந்தை அழும் போது கண்ணீருடன் ரத்தம் கலந்து வருவது அக்குழந்தையின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2017-07-08 09:28 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் அப்சல் இவர் உடற்பயிற்சியாளர். இவரது 2-வது மகள் பெயர் அஹானா அப்சல் (வயது 3)  இவள் பிறந்த 18 மாதங்கள் நன்றாக இருந்தார். இந்நிலையில் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு குழந்தை அழும் போது கண்ணீருடன் சேர்ந்து கண்களில் ரத்தம் வர ஆரம்பித்துள்ளது. சில நேரங்களில் குழந்தை அழும் போது மூன்று முறை இரண்டு முறை வரும். சில நேரங்களில் வாரத்திற்கு 5 முறை கூட வரும் என்று அக்குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர். கண்களில் மட்டும் அல்லாது காது. மூக்கு, வாய் உள்ளிட்ட துவாரங்களில் இருந்து ரத்தம் வெளியேறி உள்ளது.

இதனையடுத்து சிகிச்சைக்காக அக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை அஹானா ஒருவித அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த குழந்தைக்கு சிகிச்சை செலவுக்காக சுமார் 1 1/2 லட்சம் செலவு செய்தாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.  மும்பை, பெங்களூர், வேலூர் உள்ளிட்ட நகரங்களில் அழைத்து சென்று சிகிச்சை அளித்தாலும் இந்த நோய் குணமாகவில்லை என்று குழந்தையின் தந்தை கூறினார். 

தனது குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க பிரதமர், தெலுங்கான முதல்-மந்திரியும் உதவ முன் வர வேண்டும் என அக்குழந்தையின் பெற்றோர் சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்