ராஜஸ்தானில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து எரிந்தது, விமானிகள் உயிர்தப்பினர்

ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து எரிந்தது.

Update: 2017-07-06 07:52 GMT


ஜோத்பூர்,


ஜோத்பூர் மாவட்டத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்த போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 23 ரக பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்த ஹெலிகாப்டர் எரிந்துவிட்டது. இச்சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரு விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் விபத்திற்கு முன்னதாகவே பாதுகாப்பாக வெளியே குதித்துவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்