இஸ்ரேலில் இருக்கும் பிரதமர் மோடியிடம் சிக்கிம் செக்டார் நிலவரம் எடுத்துரைக்கப்பட்டது
இஸ்ரேலில் இருக்கும் பிரதமர் மோடியிடம் சிக்கிம் செக்டார் நிலவரம் எடுத்துரைக்கப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி,
இந்தியா- பூடான் - சீனாவின் முச்சந்திப்பான டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது. பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி உள்ளது, இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா அடாவடியான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்தியா, அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது. எல்லையில் பதட்டம் அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் சென்று உள்ள பிரதமர் மோடியிடம் நிலவரம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிக்கிம் செக்டாரில் சீன ராணுவத்தின் நகர்வானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டோக்லாம் பகுதி நிலவரத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் பிரதமர் மோடியிடம் கூறிஉள்ளனர் என உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.