பெங்களூரில் இந்து-முஸ்லீம் தம்பதிக்கு இடம் தர மறுத்த லாட்ஜ் நிர்வாகம்

பெங்களூரில் இந்து-முஸ்லீம் தம்பதிக்கு லாட்ஜ் நிர்வாகம் அறை தர மறுத்துள்ளது.

Update: 2017-07-05 10:10 GMT
பெங்களூர்,

கேரளாவை சேர்ந்தவர்கள் ஷபீக் மற்றும் திவ்யா இவர்கள் இரண்டு பேரும் வேலை காரணமாக பெங்களூர் வந்தனர்.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள அண்ணா புரம் மெயின் ரோட்டில் ஆலிவ் ரெசிடன்சி உள்ளது. இந்த ரெசிடன்சியில் அறை வேண்டும் என்று ஷபீக் மற்றும் திவ்யா  நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு ரெசிடன்சி நிர்வாகம் ஷபீக் முஸ்லீம் என்பதால் அவருக்கு அறை தர முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

அதனை தொடர்ந்து திவ்யாவிற்கு அறை தருவதாக ரெசிடன்சி நிர்வாகம் கூறியுள்ளதாக  ஷபீக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ரெசிடன்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில்,

அவர்கள் அடையாள சான்றிதழ் வழங்க மறுத்ததால் அறை தர ரெசிடன்சி நிர்வாகம் மறுத்துள்ளது. மதத்தின் காரணமாக தம்பதிக்கு அறை மறுக்கபடவில்லை.  அவர்கள் ஆரம்பத்தில் அரை மணி நேரம் அறை வேண்டும் என்று கேட்டனர் அதற்கு நாங்கள் மறுத்து விட்டோம். பிறகு ஒரு நாளுக்கு அறை வேண்டும் என்று கோரினர்.

ஷபீக் மற்றும் திவ்யா திருமணம் செய்து கொண்டதாக எங்களுக்கு ஆதாரம் தெரிவிக்கவில்லை என ரெசிடன்சி  உரிமையாளர் கூறினார்.

மேலும் செய்திகள்