பான் எண்ணுடன் ஆதார் இணைப்பில் விலக்கு அளிக்கபட்டவர்கள் விவரம்
பான் எண்ணுடன் ஆதார் இணைப்பில் விலக்கு அளிக்கபட்டவர்கள் விவரத்தை வருமானவரித்துறை வெளியிட்டு உள்ளது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது இந்த மாதம் முதல் கட்டாயம் என வருமான வரிச் சட்டம் கூறுகின்றது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில் யாருக்கெல்லாம் விலக்கு என்ற பட்டியல் வெளியிடபட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு பின், 7 கோடியே 36 லட்சம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 30 கோடி பான் எண் இருக்கும் நிலையில், இதுவரை 7 கோடியே 36 லட்சம் பான் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வருமான வரிச்சட்டம் பிரிவு 139AA-ன் கீழ் யாருக்கு எல்லாம் ஆதார், பான் இணைப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளது என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
1. என்ஆர்ஐ
2. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள்
3. 80 வயது அல்லது அதற்கு அதிக வயது உள்ளவர்கள்
4. ஜம்மு & காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் தனித்து வாழ்பவர்கள் - ஆகியோருக்கு ஆதார் இணைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.