அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயம்
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது.
இடாநகர்,
அருணாச்சல பிரதேசத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை இறங்கியுள்ளது. பாபும் பரே மாவட்டத்தில் சகாலே பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மாயமாகியுள்ளது.
பிற்பகல் 3.50 மணிக்கு மீட்பு பணிக்காக புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்ததது. ஹெலிகாப்டரில் மூன்று சிப்பந்திகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களும் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்க உதவுமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.