மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 மாவட்டங்களுக்கு ரூ.200 கோடி நிதி விடுவிப்பு-கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.200 கோடி நிதியை விடுவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-06 16:26 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.200 கோடி நிதியை விடுவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நிவாரண பணிகள்

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சிவமொக்கா, ஹாசன், சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாநில அரசு ரூ.200 கோடி நிதியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. அதில் பல்லாரி மாவட்டத்திற்கு ரூ.5 கோடி, சிக்கமகளூருவுக்கு ரூ.10 கோடி, சித்ரதுர்காவுக்கு ரூ.5 கோடி, தட்சிண கன்னடாவுக்கு ரூ.20 கோடி, தாவணகெரேவுக்கு ரூ.15 கோடி, தார்வாருக்கு ரூ.5 கோடி, கதக்கிற்கு ரூ.5 கோடி.

ரூ.200 கோடி நிதி

ஹாசனுக்கு ரூ.15 கோடி, ஹாவேரிக்கு ரூ.5 கோடி, கொப்பலுக்கு ரூ.10 கோடி, மண்டியாவுக்கு ரூ.10 கோடி, ராய்ச்சூருக்கு ரூ.10 கோடி, சிவமொக்காவுக்கு ரூ.10 கோடி, துமகூருவுக்கு ரூ.10 கோடி, உடுப்பிக்கு ரூ.15 கோடி, உத்தரகன்னடாவுக்கு ரூ.10 கோடி, விஜயநகருக்கு ரூ.5 கோடி, மைசூருவுக்கு ரூ.15 கோடி, சாம்ராஜ்நகருக்கு ரூ.5 கோடி, கோலாருக்கு ரூ.5 கோடி, சிக்பள்ளாப்பூருக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்