இறைச்சிக்காக கடத்திய 20 பசுமாடுகள் மீட்பு ;லாரி டிரைவர் கைது

உப்பள்ளியில் இருந்து பெலகாவிக்கு இறைச்சிக்காக கடத்திய 20 பசுமாடுகள் மீட்கப்பட்டது. லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-14 15:12 GMT

உப்பள்ளி;


வாகன சோதனை

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் இரவு உப்பள்ளி புறநகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக சரக்கு லாாி ஒன்று வந்தது.


அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.அப்போது லாரியில் 20 பசுமாடுகள் இருந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.


20 பசுமாடுகள் மீட்பு

விசாரணையில் அவர், உப்பள்ளியை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(வயது 28) என்பதும், உப்பள்ளியில் இருந்து பெலகாவி மாவட்டம் கித்தூருக்கு இறைச்சிக்காக பசுமாடுகளை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், டிரைவர் பிரகாஷ்ராஜை கைது செய்தனர்.

மேலும் 20 பசுமாடுகளை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட பசுமாடுகளை கோசாலைக்கு அனுப்பிவைத்தனர். சரக்கு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான டிரைவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்