கஞ்சா விற்ற வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் போலீசிடம் சிக்கினார்
விட்டலா அருகே கஞ்சா விற்ற வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் போலீசிடம் சிக்கினார்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் விட்டலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கன்யானா கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் சிலர் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விட்டலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அம்ராஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முகமது ஆசிப் தப்பி ஓடி தலைமறைவானார்.
அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தலைமறைவாக இருந்த முகமது ஆசிப்பை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.