ஓடும் சரக்கு ரெயிலின் மேல் நின்று போஸ் கொடுத்த இரு இளைஞர்கள் கைது

19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களையும் ரெயில்வே போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2023-06-23 14:58 GMT

நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நெய்டாவில் சர்வதேச யோகா தினத்தன்று ஓடும் சரக்கு ரெயிலின் மேல் நின்று செல்போன் வீடியோ ஒன்றிற்கு போஸ் கொடுத்த இரண்டு கல்லூரி மாணவர்களை ரெயில்வே பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.

சரக்கு ரெயில் ஒன்று ஒரு நீர்நிலையைக் கடக்கும்போது, இரு இளைஞர்கள், ரெயிலில் மேல் நின்று தங்கள் கைகளை அசைத்தவாறு போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் இளைஞர்கள் குறித்து விசாரித்தனர்.

பின்னர் இளைஞர்களை பிடித்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைதளத்தில் பிரபலமடைவதற்காக இந்த வீடியோவை எடுத்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களையும் ரெயில்வே போலீசார் கைதுசெய்தனர்.  

 

Tags:    

மேலும் செய்திகள்