காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.

Update: 2023-07-17 07:34 GMT

காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக அவ்வப்போது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் சம்பவம் நடைபெறுவது உண்டு. ஆனால், இந்திய வீரர்கள், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஊடுருவலை முறியடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பூஞ்ச் செக்டாரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாட்டம் இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி, இந்திய ராணுவம் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது 2 சிறிய குழு ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும், ஒரு பெரிய குழு ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் முயற்சியின் போது 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 3 ஊழியர்களை காஷ்மீர் அரசு வேலையில் இருந்து நீக்கியது.

Tags:    

மேலும் செய்திகள்