வேலைக்கு வந்த 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலி
துமகூருவில் வேலைக்கு வந்த 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
துமகூரு:
கர்நாடக மாநிலம் ஹாவேரியை சேர்ந்தவர்கள் சச்சின் (வயது 27), மல்லிகார்ஜுன் (26). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பெங்களூருவுக்கு வேலைக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு துமகூரு வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது துமகூரு டவுனில் ஹனுமந்தபுரா பாலத்தில் வந்த போது திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து தொடர்பாக துமகூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலைக்கு செல்ல வந்த வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.