பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட வழக்கு மாணவி, மாணவர்கள் இன்று விசாரணைக்கு ஆஜர்

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.

Update: 2022-11-21 03:11 GMT

பெங்களூரு,

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கல்லூரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாணவர்களில், ஆர்யன், தினகர், ரியா ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் திடீரென பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக மாரத்தஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் விளையாட்டு போக்கில் கோஷம் எழுப்பியதாக கூறினார். இதையடுத்து போலீசார் தங்களின் சொந்த ஜாமீனில் அவர்களை விடுவித்தனர். எனினும், அவர்கள் பேசிய சம்பவம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக உள்ளதால், அவர்கள் குறித்த தகவல்களை போலீசார் கைப்பற்றி தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தனர். மேலும், மாணவர்கள் 3 பேரையும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் கூறி உள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்