லஞ்சம் வாங்கிய புகாரில் 2 ரெயில்வே அதிகாரிகள் கைது - சி.பி.ஐ. நடவடிக்கை

மராட்டிய மாநிலத்தில் ரெயில்வே அதிகாரிகள் 2 பேர் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-07 10:20 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் புசாவால் பகுதியில் உள்ள மண்டல ரெயில்வே பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சுரேஷ் சந்திர ஜெயின் மற்றும் அலுவலக அதிகாரி யோகேஷ் ஏ. தேஷ்முக் ஆகியோர் மீது லஞ்ச புகார் சுமத்தப்பட்டது.

கடந்த மே 2023 முதல் மே 2025 வரையிலான காலகட்டத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு வாகனங்கள் வாங்குவதற்காக விடப்பட்ட ஒப்பந்தத்தில் இவர்கள் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, இருவரையும் இன்று கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்