பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற 2 பேர் கடலில் மூழ்கி பலி

பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

Update: 2022-10-25 00:42 GMT

புதுச்சேரி,

பெங்களூர் பெங்கவல்லி நகரை சேர்ந்தவர் ஜோசப் (45). டீ மாஸ்டர். பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரபு(29). இருவரும் குடும்ப நண்பர்கள். இவர்கள் குடும்பத்துடன் பிரபுவின் உறவினர் வீடான விழுப்புர மாவட்டம் திருக்கோயிலூர் விநாயகபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனி வேனில் கடந்த சனிக்கிழமை வந்துள்ளனர்.

நேற்று காலை பெங்களூருக்கு புறப்பட்ட இவர்கள் வழியில் புதுச்சேரிக்கு சென்றனர். தலைமை செயலகம் அருகே கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி பிரபு மற்றும் ஜோசப் அடித்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்து அப்பகுதி மீனவர்கள் மற்றும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் தூக்கி வந்தனர்.

அதிக அளவில் கடல் நீரை அவர்கள் குடித்து மயங்கி கிடந்தனர். உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெரிய கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்