வீடு புகுந்து திருடிய 2 பேர் பிடிபட்டனர்
மல்பே, குந்தாப்புரா அருகே வீடு புகுந்து திருடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மங்களூரு:-
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பகுதியில் கடந்த சில வாரங்களாக பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுெதாடர்பாக குந்தாப்புரா போலீஸ் நிலையங்களில் பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் வீடு புகுந்து திருடியதாக 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் மற்றும் ஹாஷிம் என்பதும், அவர்கள் மல்பே, குந்தாப்புரா பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பின்னர், வீடுகளுக்குள் புகுந்து தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடுத்து லாபம் சம்பாதித்து வந்ததும் தெரிந்தது. அவர்கள் மீது உடுப்பி மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை போலீசார் மீட்டனர். அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.