பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையில் 2 முதோல் இன நாய்கள்

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையில் 2 முதோல் இன நாய்கள் இடம் பெற்றுள்ளது.

Update: 2022-08-17 21:24 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா திம்மாபுராவில் நாய் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு பல்வேறு இன நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி முதோல் இன நாய்களை பற்றியும் பேசி இருந்தார்.

இதனால் முதோல் நாய்களுக்கு மவுசு அதிகரித்தது. வனப்பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் தற்போது முதோல் இன நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு படையில் 2 முதோல் இன நாய்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த 2 நாய்களும் பிறந்து 2 மாதங்களே ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாய்களை டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்