உத்தரபிரதேசம்: பத்திரிக்கையாளர்கள் இருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு
உத்தரப்பிரதேசத்தில் 2 பத்திரிக்கையாளர்கள் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்
லக்னோ,
உத்தாரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள காலியாரி மார்க்கெட் பகுதியில் உள்ளூர் செய்தித்தாள்களில் பணிபுரியும் இரண்டு பத்திரிக்கையாளர்களை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
உள்ளூர் பத்திரிகையாளர்களான ஷியாம் சுந்தர் பாண்டே மற்றும் லட்டு பாண்டே ஆகியோர் வெவ்வேறு செய்தித்தாள்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் காலியாரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பத்திரிகையாளர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக வாரணாசி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.