கங்கை நதியில் படகில் 'சிக்கன் கபாப்' சமைத்து சாப்பிட்டு போதை விருந்து - 2 பேர் கைது

கங்கை நதியில் படகில் சிக்கன் கபாப் சமைத்து போதை விருந்து நடத்திய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

Update: 2022-09-03 20:13 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டத்தின் டாராகஞ்ச் பகுதியில் கங்கை, யமுனா நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. இந்து மத புராணங்களின்படி சரஸ்வதி நதியும் இப்பகுதியில் தான் சங்கமிப்பதாக இந்து மதத்தினரால் நம்பப்படுகிறது. ஆகையால், ஆறுகள் சங்மிக்கும் டாராகஞ்ச் பகுதி இந்து மதத்தினரின் புனிதமானதாக கருத்தப்படுகிறது.

இந்நிலையில், கங்கை, யமுனா நதிகள் சங்கமிக்கும் பகுதியில் படகில் சிலர் 'சிக்கன் கபாப்' உள்ளிட்ட அசைவ உணவு சமைத்து சாப்பிடுவதும், போதை புகைபிடிப்பது போன்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், டாராகஞ்ச் நகரின் பக்‌ஷி குர்ட் பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர். ஹசன் அகமது, முகமது ஆசிப் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 4 பேரை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்