உத்தரபிரதேசம்: டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி, 7 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-06-09 11:51 GMT

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தை சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழுவினர், ஹரத்வாரில் இருந்து டிராக்டரில் திரும்பிகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த திடீர் விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்ச்சை பெற்று வருகின்றனர்.

மண்டவேலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்