ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
புதுடெல்லி,
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. ஜோதி மிர்தா மற்றும் சவாய் சிங் ஆகிய 2 காங்கிரஸ் தலைவர்கள் நேற்று கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களை பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். இந்த தலைவர்களின் வரவால் மாநிலத்தில் பா.ஜனதா குடும்பம் மேலும் வலுவடையும் என கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான அருண் சிங் கூறியுள்ளார்.