மேற்கு வங்காளம்: கச்சா வெடிகுண்டை பந்து என்று நினைத்து எடுத்த 2 குழந்தைகள் - குண்டு வெடித்ததில் காயம்

மேற்கு வங்காளத்தில் சாலையோரத்தில் கிடந்த கச்சா வெடிகுண்டை பந்து என்று தவறாக நினைத்து எடுத்த இரண்டு குழந்தைகள் அந்த வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்தனர்.

Update: 2023-07-08 19:49 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேர்தல் தொடர்பான வன்முறையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சாலையோரத்தில் கிடந்த கச்சா வெடிகுண்டை பந்து என்று தவறாக நினைத்து எடுத்த இரண்டு குழந்தைகள் அந்த வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்தனர். பாங்கூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து அங்கு வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அந்த குழந்தைகள் இருவருக்கும் 8 மற்றும் 10 வயதாகும். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்