கேரளா: திருவனந்தபுரத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு!

நோரோ வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது.

Update: 2022-06-06 02:57 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் இருவருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்படுள்ளது.

இது குறித்து, கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், "விழிஞ்சம் பகுதியில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கவலை கொள்ளத் தேவையில்லை. அப்பகுதியில், சுகாதாரத் துறை நிலைமையை ஆய்வு செய்துள்ளது.

அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோரோ வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவித்தார்.

நோரோவைரஸ் என்பது ஒரு தொற்றுநோயாகும். இது சில நேரங்களில் 'வயிற்றுக் காய்ச்சல்' அல்லது 'குளிர்கால வாந்தி காய்ச்சல்' என்றும் குறிப்பிடப்படுகிறது. இது அசுத்தமான உணவு, நீர் மற்றும் நிலப்பரப்புகள் மூலம் பரவுகிறது.

நோரோ வைரஸின் முக்கிய அறிகுறிகள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி என்று கேரளாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்