மும்பை: உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்து ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் வசூலித்த இருவர் கைது

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஹோட்டல் உரிமையாளர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

Update: 2022-12-06 01:50 GMT

image instagrammed by mumbai police

மும்பை,

மும்பையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளாக வேடமணிந்து ஓட்டல் உரிமையாளர்களை ஏமாற்றியதாக இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் புறநகர் போரிவலியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளாக மாறுவேடத்தில் நுழைந்து அதன் உரிமையாளரிடம் இருந்து ரூ. 5,000 வசூலித்துள்ளனர்.

இருப்பினும், ஹோட்டல் மேலாளர், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், விசாரித்ததில், இருவதும் போலியாக வேடமணிந்து குற்றசெயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இருவரிடமிருந்தும் போலி அடையாள அட்டைகள், ஒரு கார் மற்றும் பிற பொருட்களை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்