இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

டெல்லியில் இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2023-09-10 21:55 GMT

புதுடெல்லி,

இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வகுப்பதற்காக இந்த குழு ஏற்படுத்தப்பட்டது.

இந்த குழுவின் முதல் கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்