கர்நாடகத்தில் புதிதாக 1,713 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது,

Update: 2022-08-20 21:50 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று புதிதாக 32 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 965 பேர், மைசூருவில் 97 பேர், ஹாசனில் 64 பேர், தாவணகெரேயில் 59 பேர், பல்லாரி, பெலகாவியில் தலா 48 பேர் உள்பட 1,713 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை 40 லட்சத்து 40 ஆயிரத்து 111 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தார்வாரில் 2 பேர், பெங்களூரு புறநகர், மைசூருவில் தலா ஒருவர் என 4 பேர் புதிதாக கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதுவரை 40 ஆயிரத்து 166 பேர் இறந்து உள்ளனர். நேற்று 1,034 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை 39 ஆயிரத்து 89 ஆயிரத்து 451 பேர் குணம் அடைந்து உள்ளனர். 10 ஆயிரத்து 452 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்