ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் 17 கிலோ தங்கம், ரூ.1.57 கோடி பணம் பறிமுதல்

ஒடிசாவில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம் மற்றும் ரூ.1.57 கோடி ரொக்கம் ஆகியவற்றை மத்திய புலனாய்வு துறை பறிமுதல் செய்தது.

Update: 2023-01-17 18:29 GMT

புவனேஸ்வர்,

ஒடிசாவில் ஓய்வு பெற்ற அதிகாரி பிரமோத் குமார் ஜெனாவிடம் இருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம் மற்றும் ரூ.1.57 கோடி ரொக்கம் ஆகியவற்றை மத்திய புலனாய்வு துறை பறிமுதல் செய்தது.

ஜனவரி 4 ஆம் தேதி, ஏசிபி ஜெனா ரூ.1.92 கோடி அளவுக்கு வரம்பு மீறி சொத்து வைத்திருப்பதைக் கண்டறிந்தது. புவனேஸ்வர், கட்டாக் மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அதே நாளில் ஜெனாவின் சொத்தில் இருந்து சுமார் ரூ.10 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது.

60 வயதான இவர், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர், தலைமை சரக்கு போக்குவரத்து மேலாளர், தலைமை வணிக மேலாளர், தலைமை போக்குவரத்து திட்டமிடல் மேலாளர், முதன்மை தலைமை வணிக மேலாளர் என பல்வேறு பதவிகளில் பணியாற்றிய போது சொத்து சேர்த்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Tags:    

மேலும் செய்திகள்