சிறுமி 12 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்

16 வயது சிறுமி 8 கொடூரர்களால் 12 மணி நேரம் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2022-12-19 04:21 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 8 பேர் கொண்ட கும்பலால் 12 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-

மராட்டிய மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடற்கரை அருகே உள்ள மஹிம் என்ற கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, ஆள்நடமாட்டமற்ற பங்களாவுக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளான்.

அங்கு சிறுமியை அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், அங்கு வந்த இளைஞனின் கூட்டாளிகள் 7 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பங்களாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேரும் பின்னர் சிறுமியை கடற்கரை அருகே உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு வைத்து சிறுமியை 8 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை காலை 10 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

12 மணி நேரத்திற்கு மேல் சிறுமியை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்