முஸ்லிம் தொண்டர்கள் 150 பேர் ராஜினாமா

ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து முஸ்லிம் தொண்டர்கள் 150 பேர் ராஜினாமா செய்தனர்.

Update: 2023-09-28 18:45 GMT

மைசூரு

பா.ஜனதா கூட்டணி

கர்நாடகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் இரு கட்சிகளும் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில், காங்கிரஸ் அறிவித்த 5 உத்தரவாத தி்ட்டங்களில் 4 திட்டங்களை அமல்படுத்தி உள்ளது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தாயார் ஆகி வருகிறது. இந்தநிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி, ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைக்கிறது. இதனை முன்னாள் பிரதமர் தேவேகவுடா உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து வந்தார். இதன்மூலம் பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணி உறுதியாகி உள்ளது.

முஸ்லிம்கள் அதிருப்தி

இதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து விலக முடிவு செய்தனர்.

இந்தநிலையில் மைசூரு டவுன் என்.ஆர். மொஹல்லா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நரசிம்மராஜா தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சி தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், நரசிம்மராஜா தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சி பொதுச்செயலாளர் அப்துல் காதர் சாகித் உள்பட 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் தொண்டர்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து விலக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவர்கள் அனைவரும் ராஜினாமா கடிதம் ஒன்றை எழுதினர்.

கடிதம்

பின்னர் அந்த கடிதத்தை தபால் மூலம் பெங்களூருவில் உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். பா.ஜனதா கட்சி கூட்டணியால் மேலும் முஸ்லிம் தலைவர்கள், பிரமுகர்கள் பலர் விலகுவார்கள் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்