இந்தியாவுக்குள் ஊடுருவும் திட்டத்துடன் எல்லையில் 150 பயங்கரவாதிகள் - ராணுவ அதிகாாி தகவல்

ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ 150 பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-06-25 13:12 GMT

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் (கோப்புப் படம் - பிடிஐ)

ஸ்ரீநகர்,

ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ 150 பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ அதிகாாி ஒருவா் தகவல் தொிவித்து உள்ளாா்.

இது தொடா்பாக அவா் தொிவிக்கையில், ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ 150 பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் உள்ளனா். எல்லைப்பகுதியில் உள்ள மன்ஷேரா, கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் 11 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகிறது. அதில் சுமாா் 500 முதல் 700 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்த ஆண்டில் பயங்கரவாதிகள் யாரும் எல்லைக்குள் நுழையவில்லை. எல்லைபகுதியில் பயஙகரவாதிகள் ஊடுருவும் முயற்சியை பாதுகாப்பு படையினா் முறியடித்து உள்ளனா். கடந்த 40 நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனா்.

பந்திபோரா மற்றும் சோபோர் பகுதியில் ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்யும் வழிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவா் தொிவித்தாா்.

கடந்த சமீப காலங்களில் எல்லை பகுதியில் உள்ள வேலியை பலப்படுத்தப்பட்டது. அங்கு கண்காணிப்பு கருவிகள் அதிக அளவு பொருத்தப்பட்டு கண்காணித்து வருவதால் பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறைந்துள்ளது.

ஆனால், கண்காணிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளை தவிா்த்து மற்ற பகுதிகள் வழியாக ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனா். தற்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக ஊடுருவல் குறைந்து உள்ளது. ரஜோரி-பூஞ்ச் மற்றும் பிர் பஞ்சால் பகுதிகள் வழியாக ஊடுருவ முயன்று வருவதாக அவா் தொிவித்தாா்.

Tags:    

மேலும் செய்திகள்