சிப்ஸ் திருடியதற்காக 15 வயது சிறுவனை தாக்கி, நிர்வாணமாக்கிய 5 பேர் கைது

சிறுவனை அழைத்துச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2023-08-05 18:06 GMT

சிம்லா,

இமாச்சலப் பிரதேச மாநிலம் ரோஹ்ருவில் உள்ள ஒரு கடையில் 10 ரூபாய் மதிப்புள்ள சிப்ஸ் பாக்கெட்டை திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை நிர்வாணப்படுத்தி, சரமாரியாக அடித்து, ஊர்வலமாக அழைத்துச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். மேலும், சிறுவனை அழைத்துச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இதுகுறித்து இமாச்சல பிரதேச அரசை கடுமையாக சாடிய அம்மாநில முன்னாள் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர், ரோஹ்ருவில் சிறுவனுக்கு நடந்த அருவருப்பான செயல் மனித குலத்திற்கு வெட்கக்கேடானது என்றும், இது நமது பாரம்பரியம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்