மராட்டிய மாநிலம் தானேயில் இந்த ஆண்டில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 15 பேர் பலி

மராட்டிய மாநிலம் தானேயில் இந்த ஆண்டில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2022-08-21 14:09 GMT

தானே,

மராட்டிய மாநிலம் தானே, பால்கர் மற்றும் ராய்காட்டில் உள்ள பன்வெல் ஆகிய குடிமைப் பகுதிகளை உள்ளடக்கிய தானே பகுதியில் இந்த ஆண்டில் இதுவரை 15 பேர் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 வரை, 2,07,742 பேருக்கு எச்1என்1 இன்ப்ளூயன்ஸ் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 462 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 15 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

அதிகபட்சமாக தானே மாநகராட்சியில் 291 பேருக்கு பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டது. அவர்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்ட 56 பேர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்