பள்ளிக்கூடத்திற்கு 15 நிமிடம் முன்பாக ஆசிரியர்கள் வர வேண்டும்-கர்நாடக பள்ளி கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கூடத்திற்கு 15 நிமிடம் முன்பாக ஆசிரியர்கள் வர வேண்டும் என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-07 21:38 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலையில் பணிக்கு தாமதமாக வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சமீபத்தில் மண்டியா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கு, மந்திரி நாகேஸ் சென்றிருந்த போது, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அரை மணிநேரம் தாமதமாக வந்திருந்தார்கள்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளிகள் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய பயோ மெட்ரிக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்