மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க ரெயில்வே மந்திரி வலியுறுத்தல்

மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரெயில்பாதை திட்டத்திற்கு ஜப்பான், கடனுதவியோடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புகளையும் வழங்கவுள்ளது.

Update: 2022-06-30 11:26 GMT

மும்பை,

மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரெயில்பாதை திட்டம் குறித்த 14-வது கூட்டுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

மும்பை, அகமதாபாத் நகரங்களை இணைக்கும் பிரம்மாண்ட புல்லட் ரெயில் திட்டம், மொத்தம் 508 கி.மீ. தொலைவிலான இந்த புல்லட் ரெயில் திட்டத்தில், 325 கி.மீ. பகுதி குஜராத் மாநிலத்தில் உள்ளது.

மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரெயில்பாதை திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க உறுதிபூண்டுள்ள ஜப்பான், கடனுதவியோடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புகளையும் வழங்கவுள்ளது. திட்டத்தின் ஒட்டுமொத்த நலன்கருதி, பிரதமரின் கருத்துப்படி, ஒரு திட்டம்- ஒரே குழு என்ற அடிப்படையில் பணியாற்ற இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

இது குறித்து ஜப்பான் தூதரக அதிகாரி சதோஷி சுசூகி கூறுகையில் இந்த பிரம்மாண்ட திட்டம் மூலம் ஜப்பான் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வருவது மட்டுமல்லாமல் இதன் வழித்தடத்தில் மிகப்பெரிய நகர வளர்ச்சியையும் கொண்டுவரும் என்றார்.

இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக இன்று நடைபெற்ற 14-வது கூட்டுக்குழு கூட்டத்திற்கு, இந்திய தரப்பில், ரெயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உடன் ஜப்பானிய தரப்பில் அந்நாட்டு பிரதமரின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் மோரி மசாஃபுமி தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தின் போது, திட்டப்பணியின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன் வீடியோ படமும் திரையிடப்பட்டது. மேலும், நிதி வழங்குதல், ஒப்பந்தப்பணிகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க ரெயில்வே மந்திரி வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்